14 வயதான ஈவா மெக்பார்லேண்ட், அயர்லாந்தின் இளம் உருவப்படம் பரிசின் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உயர்தர கலைப் பொருட்களின் தனிப்பயனாக்கப்பட்ட மரப்பெட்டியை வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.மேலும் € 500 பரிசுத்தொகை பெற்றார்.

தனது அறிக்கையில், மெக்பார்லாண்ட், “இந்த உருவப்படத்தில் இருப்பது எனது தங்கை எலனின். இதில் அவள் மாஸ்க் அணிந்துள்ளாள். இது இப்போது கிட்டத்தட்ட சாதாரணமாகத் தெரிகிறது; ஆனால் வெகு காலத்திற்கு முன்பு இது விசித்திரமாகத் தோன்றும், என்றார்.
மேலும் போட்டியில் கலந்து கொண்ட பல பேரில் ஆறு வயது சிறுமியான கோனார் மெக்போலின், 6 மற்றும் அதற்கு மேற்பட்ட பிரிவில் தனது சுய உருவப்படத்தை வரைந்து வென்றார்.
இந்த பரிசு கண்காட்சி, 25 பிற பட்டியலிடப்பட்ட படைப்புகளை உள்ளடக்கியது. இவை இப்போது அயர்லாந்தின் ஒரு தேசிய கேலரியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கண்காட்சி 21 மார்ச் 2021 வரை இயங்கும்.