செவ்வாயன்று பாக்தாத்தின் பசுமை மண்டலம் என்று அழைக்கப்படும் பகுதியில் ஏழு ராக்கெட்டுகள் மோதி உள்ளன. இச்சம்பவம் ஒரு குழந்தையை கொன்றது. குறைந்தது 7 நபர்கள் படுகாயம்
அடைந்ததாக ஈராக் இராணுவப் படைகள் தெரிவித்துள்ளன.

செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் இந்த தாக்குதல் நடந்ததுள்ளது.
பசுமை மண்டலத்திற்குள் நான்கு ராக்கெட்டுகள் தரையிறங்கின, அதற்கு வெளியே மூன்று ராக்கெட்டுகள் தரையிறங்கின. பசுமை மண்டலம் என்பது பல தூதரகங்கள் அமைந்துள்ள தலைநகரில் பெரிதும் பலப்படுத்தப்பட்ட சர்வதேச மண்டலத்திற்கு வழங்கப்பட்ட பேச்சுவழக்கு பெயர். யு.எஸ். தூதரகத்திலிருந்து சுமார் 2,000 அடி தூரத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு சேவையை ராக்கெட்டுகளில் ஒன்று தாக்கியதாக பாதுகாப்பு அதிகாரிகள் என்.பி.சி நியூஸிடம் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில், ஐந்து பேர் பொதுமக்கள், இருவர் ஈராக் பாதுகாப்புப் படையினர். இதனைத் தொடர்ந்து ஈராக்கிய இராணுவ அதிகாரிகள் தலைநகரின் கிழக்கு அல்-அமீன் பகுதியில் ராக்கெட்டுகள் வீசப்பட்ட இடத்தைக் கண்டுபிடித்ததாகக் கூறினர்.
முன்னர் அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டோபர் மில்லர், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிலிருந்து ஜனவரி 15 ஆம் தேதிக்குள் 2,500 தரைப்படை வீரர்களை திரும்பப் பெறுவதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.