ஈர்ப்புவிசை இல்லாத காரணத்தால் ,ஆறு மாதங்கள் விண்வெளியில் விண்வெளி வீரர்கள் தங்கினால் 10% எலும்பு அடர்த்தியை இழக்க நேரிடும் என்று நாசா கூறுகிறது,

விளைவை ஈடுசெய்ய, அவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம், வாரத்தில் குறைந்தது ஆறு நாட்கள் உடற்பயிற்சி செய்கிறார்கள். ஆனால் ஒரு லண்டன் பொறியாளர் கூறுகையில், தான் கண்டுபிடித்த ஒரு இயந்திரம் அந்த கடுமையான உடற்பயிற்சிகளையும் ஒரு நாளைக்கு ஆறு நிமிடங்களாகக் குறைக்கக்கூடும் என்கிறார்.
" ஒருவர் தொடர்ச்சியாக குதிக்கும் போது அவர்களின் எலும்பு பலம் அடைகிறது. ஆனால் ஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் குதிப்பது மிகவும் கடினம்.ஆகவே இந்த இயந்திரத்தை பயன்படுத்தி குதிப்பதன் மூலம் விண்வெளி வீரர்கள் எலும்பு பலவீனம் ஆவதில் இருந்து தப்பிக்கலாம் ", என்று கண்டுபிடிப்பாளர் ஜான் கென்னட் கான்கார்ட் கூறுகிறார்
இந்த புதிய கண்டுப்பிடிப்பு விண்வெளி வீரர்கள் உடற்பயிற்சி செய்யும் நேரத்தை 95% குறைக்கும் .
விண்வெளி வீரர்கள் பூமியை அடையும் போது அவர்கள் நல்ல உடல்நலத்தில் இருப்பது அவசியம்.இந்த கருவி அதனை உறுதி செய்கிறது
அடுத்த ஆண்டு, கென்னட்டின் குழு ஈர்ப்பு ஈர்ப்பு விசை இல்லாத விமானத்தில் இயந்திரத்தை சோதிக்கும்.2024 ஆம் ஆண்டில் ஒரு விண்வெளி பயணத்தில் இதைப் பயன்படுத்துவார் என்று நம்பப்படுகிறது