டுடால்ஃப்.காம் என்ற இணையத்தளத்தில் கெர்ஜெலி டுடெஸ் என்பவர் ஒரு அபிமான மற்றும் தந்திரமான சவாலை உருவாக்கியுள்ளார் . மேலும் கழுகுக் கண்களைக் கொண்டவர்கள் கூட இவரின் புதிர்களுக்கு விடை தெரியாமல் சிரமப்படுகின்றனர்.
இந்த படத்தில் எங்கோ, ஒரு முயல் ஒளிந்து கொண்டிருக்கிறது . ஆனால் கெர்ஜெலி புத்திசாலித்தனமாக நூற்றுக்கணக்கான பூனைகளை முயலோடு கலந்துள்ளார்.
இதோ இது தான் அந்த புதிர். சுட்டி முயலை தேடுங்கள்.

கெர்ஜெலியின் கலை பாணி இந்த புதிரை சவாலாக ஆக்குகிறது, ஏனெனில் விலங்குகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. இருப்பினும், ஆங்காங்கே ஒரு சில வண்ணங்கள் சில பூனைகளை பிரிக்க உதவுகிறது, ஆனால் முயல் எங்கே?
அதைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் இருந்தால், இங்கே விடை உள்ளது: படத்தின் இடது புறத்தில் தேட முயற்சிக்கவும்.

இந்த புதிரை நீங்கள் ரசித்திருந்தால், இன்னும் பல புதிர்களை இந்த இணையத்தில் கண்டு கொள்ளுங்கள்.
இரண்டாவது தேசிய கொரோனா வைரஸ் ஊரடங்கிற்கு மத்தியில் வீட்டில் நேரத்தை சுவாரசியமாக செலவிட இத்தகைய கடினமான சவால்களை உருவாக்கி உள்ளதாக குழு தெரிவித்தது.