இன்ஸ்டாகிராம் புதுப்பிப்பின் பிறகு பயனர்களுக்கு 'எடை இழப்பு', மற்றும் 'கலோரிகளை எரித்தல்' தொடர்பான உள்ளடக்கத்தை பரிந்துரைத்ததால் மன்னிப்பு கோரியுள்ளது.
எமிலி கிளார்க்சன், தன்னைப் பின்தொடர்பவர்களுக்கு உணவு கட்டுப்பாடு மற்றும் எடை இழப்பு தொடர்பான உள்ளடக்கம் பரிந்துரைக்கப்படுவதாகவும், இது உடல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்றும் புகார் கூறினார். "சமூக ஊடக தளங்கள் தங்கள் பயனர்களின் மன ஆரோக்கிய பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகக் கூறும் நேரத்தில், இது போன்ற பரிந்துரைகளை வழங்குவது எனக்கு சற்று வருத்தமாக இருக்கிறது, என்று கிளார்க்சன் தி கூறினார்.

இதனை குறித்து பேஸ்புக் கூறுகையில்,இன்ஸ்டாகிராமில் ஹேஷ்டேக்குகள் மற்றும் பயனர் பெயர்களைத் தாண்டி ஒரு புதிய தேடல் செயல்பாட்டை உருவாக்க நினைத்தோம். இது நீங்கள் மிகவும் விரும்பும் உள்ளடக்கத்தை எளிதாகக் கண்டுபிடித்து ஆராய உதவும். இந்த புதிய அம்சத்தின் ஒரு பகுதியாக, நீங்கள் தேடும்போது, இன்ஸ்டாகிராம் நீங்கள் தேட விரும்பும் தலைப்புகளை பரிந்துரைக்கும். அந்த பரிந்துரைகளும், தேடல் முடிவுகளும் பொதுவான நலன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டவை, எடை இழப்பு அவற்றில் ஒன்றாக இருக்கக்கூடாது. இத்தகைய தவறுகள் இங்கு தோன்றுவதைத் தடுக்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்றது.