
தமிழக அரசின் கூட்டுறவுத் துறை பதிவாளர் அவர்களின் விளக்கம் குறித்த தகவல் ..
தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளை முடக்குவதற்கு மத்திய அரசு முயற்சி மேற்க்கொள்வதாக வந்த தகவலையடுத்து உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது தாங்கள் அறிந்ததே. தற்போது அது குறித்து தமிழக அரசின் சார்பில் கூட்டுறவுத்துறை பதிவாளர் அவர்கள் தொலைபேசி மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் முடக்க நடவடிக்கை 2012 முதல் தமிழக அரசால் தடுத்து நிறுத்தபட்டது. அதுவே தற்போதும் தொடர்வதாகவும், ரிசர்வ் வங்கி பண பரிவர்த்தனை மற்றும் தனிநபர் வங்கி கணக்குகள் இணையம் மூலம்(Internet Core Banking System) மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டுமென கொள்கை முடிவெடுத்துள்ளது. அதனடிப்படையில் மத்திய கூட்டுறவு வங்கிக்கும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளுக்கும் இடையே அதற்கான இணையதள வசதி ஏற்படுத்தப்படாததால் தற்காலிகமாக மத்திய கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெயரில் சேமிப்பு கணக்குகள் மட்டும் துவங்கப்படும். கடன் பெறும் தொகை மட்டும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். அதனை விவசாயிகள் தேவைக்கேற்ப விடுவித்துக் கொள்ளளலாம்.
மேலும் கடன்கள்,உரம் வழங்குவது குறித்தான அனைத்து நடைமுறைகளும் பழைய நிலையிலேயே தொடக்க கூட்டுறவு வங்கிகள் மூலமே தொடரும் என தெரிவித்துள்ளார். KCC கார்டு வழங்குவதற்கான நடைமுறைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் வழங்கப்பட்டு விடும் என தெரிவித்துள்ளார். என்பதை தகவலுக்காக தெரிவித்துக் கொள்கிறேன்.