"ஒட்டுமொத்த தேசமும் அவருடைய தலைமைப்பண்பை பாராட்டுகிறது, ஆனால் நான் அவரை எப்போதும் என் அன்பான பாட்டி என்று நினைவில் கொள்கிறேன். அவரது போதனைகள் தொடர்ந்து என்னை ஊக்குவிக்கின்றன".இத்தகைய பதிவை ராகுல் காந்தி டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
இன்று இந்திரா காந்தி அவர்களின் பிறந்த நாள் ஆகும்.இவர் 1966 மற்றும் 1977 க்கு இடையில் பிரதமராக இருந்தார், மீண்டும் 1980 ஜனவரி முதல் 1984 இல் அவர் படுகொலை செய்யப்பட்டவரை பிரதமராக இருந்தார். இந்திரா காந்தி அக்டோபர் 31 ம் தேதி தனது இல்லத்தில் தனது சொந்த மெய்க்காப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
அவரது 103 பிறந்தநாளை முன்னிட்டுஅவரின் அரிய 24 புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். அவற்றில் சில இங்கே:

பிரான்சில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நேருவுடன் இந்திராகாந்தி

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் விஜயலக்ஷ்மி பண்டிட் உடன் இந்திரா காந்தி

மகாத்மாகாந்தியுடன் இந்திராகாந்தி

தன் மகன் ராஜிவ்காந்தியுடன் இந்திராகாந்தி