புலிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதை மையமாக கொண்டு தேசிய விலங்காக புலி அறிவிக்கப்பட்டது. இந்தோனேசியாவில் போர்னியோ எனும் தீவில் சின்கா என்ற பெயர் கொண்ட உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சுமத்ரா இன புலிகள் வசித்து வருகின்றன. இங்கு அதிகமான மழைபொழிவினால் புலிகள் இருப்பிடம் சேதமடைந்தது. இதை கண்டு ஆக்ரோஷமடைந்த புலிகள் பராமரிப்பாளரை கடித்து கொதறிவிட்டு , தப்பித்து சென்றுள்ளது.

தப்பிய இரண்டும் 18 வயதான பெண் புலிகள் என்பது தெரியவந்துள்ளது. அதில் ஒரு பெண்புலி உயிருடன் பிடிக்கப்பட்டு உள்ளது. தப்பி ஓடிய இன்னொரு புலி மிகவும் ஆக்கிரோஷமாக இருந்ததால் அது வேறுவழியின்றி சுட்டு கொல்லப்பட்டது. உயிரியல் பூங்காவின் பராமரிப்பாளர் புலிகளால் கடித்து கொதரப்பட்ட நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.