இஸ்ரோ பி.எஸ்.எல்.வி-சி 49 / ஈஓஎஸ் -01 ஏவுகணை வானில் ஏவப்பட்டது ஸ்ரீஹரிகோட்டா, நவம்பர் 7: பத்து செயற்கைகோள்களை ஏந்திச் செல்லும் இந்த ராக்கெட்டின் ஏவுதலை இஸ்ரோ நேரடியாக ஒளிபரப்பியது .
பி.எஸ்.எல்.வி சி 49 / ஈஓஎஸ் -0 ஏவுதல் பிற்பகல் 2:30 மணி முதல் தொடங்கியது.கவுண்டன் முடிந்து 3:11 மணி அளவில் வானில் ஏவப்பட்டது.இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ வலைத்தலங்களான பேஸ்புக், டிவிட்டர் மற்றும் யூடூபில் இதனை பொதுமக்கள் கண்டனர்.இந்த ஏவுகணை 44.5 மீ அளவுடையதாகும். லுதுனியா மற்றும் லுக்சம்பரஹ் போன்ற 9 வெளிநாடுகளின் செயற்கைக்கோளை ஏந்தி செல்கிறது என்பது பெருமைக்குரியது.
