இந்திய-அமெரிக்கரான கர்னல் ராஜா ஜான் வர்புதூர் சாரி, 18 விண்வெளி வீரர்களில் ஒருவராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.குழுவில் பாதி பேர் பெண்கள். இவர்கள் நாசாவால் சந்திரனுக்கும் அதற்கு அப்பாலும் செல்லும் பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நவீன சந்திர ஆய்வு திட்டம், 2024 ஆம் ஆண்டில் முதல் பெண்ணையும் அடுத்த ஆணையும் சந்திரனில் தரையிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தசாப்தத்தின் முடிவில் ஒரு நிலையான மனித சந்திர இருப்பை நிறுவும் என்று அமெரிக்க விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாசா புதன்கிழமை தனது ஆர்ட்டெமிஸ் நிலவு-தரையிறங்கும் திட்டத்திற்கு பயிற்சி பெறும் 18 விண்வெளி வீரர்களின் பெயர்களை அறிவித்தது. அமெரிக்க விமானப்படை அகாடமி, மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) மற்றும் யு.எஸ். நேவல் டெஸ்ட் பைலட் பள்ளி ஆகியவற்றின் பட்டதாரி சாரி, 43, இந்த பட்டியலில் உள்ள ஒரே இந்திய-அமெரிக்கர். அவர் 2017ல் நடத்தப்பட்ட விண்வெளி வீரர் வகுப்பில் சேர நாசாவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆரம்ப விண்வெளி வீரர் பயிற்சியை முடித்த பின்னர் இப்போது பணி நியமனம் செய்தார்.