• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

இந்தியாவில் முடக்கப்படுமா ட்வீட்டர்!!- மத்திய அரசுக்கும் ட்வீடருக்கும் இடையே வலுவடையும் பனிப்போர்?

உலகையே தன் கையில் அடங்கியுள்ள சமூக வலைத்தளங்களில் முக்கியமானது ட்வீட்டர். உலகில் உள்ள சாதாரண மக்கள் முதல், பெரிய பெரிய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் வரை தங்களுடைய கருத்துக்களை பதிவிடும் தளமாக ட்வீட்டர் இருந்து வருகிறது.


இந்தியாவில் விவசாயிகளின் போராட்டம் வலுவடைந்து வந்த சூழல் ட்வீட்டர் எனும் சோசியல் மீடியா மூலமாக உலகில் உள்ள அனைவருக்கும் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலக அளவில் இருக்கின்ற பிற நாடுகளை சேர்ந்த தொழிலதிபர்கள், பிரபலங்கள் என விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றன. எழும் கருத்துக்களில் பாதிக்கு பாதி இந்திய அரசுக்கு முரண்பாடாக இருப்பதால் பெரிய சர்ச்ச்சை எழுந்துள்ளது.


விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு செய்யும் விதத்தில் எழுந்துள்ள கருத்துக்களில் பல வன்முறையை தூண்டும் விதமாக அமைந்துள்ளதால் அந்த கணக்குகளை நீக்குங்கள் என்று மத்திய அரசு ட்வீட்டரிடம் கேட்டு கொண்டது. ஆனால் அனைத்து கணக்குகளையும் நீக்க முடியாது என ட்வீட்டர் நிறுவனம் பத்தி அளித்ததால் மத்திய அரசுக்கும் ட்விட்டருக்கும் இடையேயான பனிப்போர் தீவிரமடைந்துள்ளது. ட்வீட்டரருக்கு பதிலாக இந்தியாவால் உருவாக்கப்பட்ட கூ என்ற செயலியை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.



இது போன்ற சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்த போது, பல்வேறு தரப்பினரும் டிவிட்டரில் கருத்து தெரிவித்தனர். ஆனால் அமெரிக்க அரசு அதை கண்டுகொள்ளவில்லை. ட்வீட்டரை கட்டுப்படுத்தவும் நினைக்கவில்லை. ஆனால் இந்திய அரசு ட்வீட்டரை கட்டுப்படுத்த நினைப்பது அனைத்து நாட்டு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு வேளை இந்தியாவில் ட்வீட்டரை தடை செய்துவிடுவார்களோ என்ற பதட்டத்துடன் ட்வீட் செய்து கொண்டு இருக்கின்றனர் இந்திய டிவிட்டர்வாசிகள்.

19 views0 comments

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios