இந்திய கிரிக்கெட் அணி நேற்று இரவு சிட்னியில் 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்தது. அனைத்து வீரர்களும், ஆதரவு ஊழியர்களும், குடும்பங்களும் மிகவும் பாதுகாப்பான மேற்கு சிட்னி ஹோட்டல் தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேறி ஒரு வழக்கமான நகர ஹோட்டலுக்கு மாற்றப்பட்டனர். அணிக்கு விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகள் இப்போது நீக்கப்பட்டது. மேலும் அவர்கள் சற்று சுதந்திரமாக இருக்கலாம். இன்று முதல், வீரர்கள் வெளியில் ஒரு குறுகிய நடைப்பயணத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் உள்ளூர் உணவகத்திலிருந்து உணவுகளை உட்கொள்ளலாம். ஆனால் வெளியாட்கள் யாரும் அவர்களுடன் அமர அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆட்டோகிராஃபில் கையெழுத்திட கூடாது எனவும், ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்க கூடாது எனவும், நெரிசலான இடங்களைச் செல்வதை தவிர்க்கவும் வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டாக்ஸியை அழைக்க அனுமதிக்கப்படாது.
ஆஸ்திரேலிய அணி உறுப்பினர்களுக்கும் இதே விதிகள் பொருந்தும். இரு அணிகளும் ஒரே ஹோட்டலில் தங்கியிருக்கும் போதிலும், வெவ்வேறு இடங்களில் உள்ளனர். இந்த வார தொடக்கத்தில் புதிய கட்டுப்பாடுகள் குறித்து வீரர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதாக அறியப்படுகிறது.