உலக பொருளாதார மன்றம், இந்தியாவை உலகின் 5 வது சிறந்த பாரம்பரிய இடமாக மதிப்பிட்டு உள்ளது. இத்தகைய சிறப்பை அடைய இந்தியாவின் வளங்களே காரணம் என்றாலும் அவற்றை எடுத்துரைத்த சிலரின் முயற்சிகளும் பாராட்டிற்குரியவையே.

'தேகோஅப்னாதேஷ் ’வெபினார் இந்தியாவின் வளமான பன்முகத்தன்மையை உலகிற்கு காண்பிக்கும் முயற்சியாகும். மலைகள், காடுகள், ஆறுகள், பாலைவனங்கள், சதுப்பு நிலங்கள், தீவுகள், கால்வாய்கள், வனவிலங்குகள் மற்றும் 31 க்கும் மேற்பட்ட சாகச நடவடிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தியாவின் மகத்தான வலிமை, ஆற்றல் மற்றும் மறைக்கப்பட்ட ரகசியங்களை இந்த வெபினார் விவரித்தது.
இந்த வெபினாரை ஹாலிடே மூட்ஸ் அட்வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் தேஜ்பீர் சிங் ஆனந்த் வழங்கினார். தேஜ்பீர் சிங் இந்திய சாகச பயணத் துறையில் 3 தசாப்தங்களுக்கும் மேலான அனுபவமுள்ளவர். அவர் அட்வென்ச்சர் டூர் ஆபரேட்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (ATOAI) வழங்கிய “ஹால் ஆஃப் ஃபேம் விருது பெற்றவர்” ஆவார். சாகச மற்றும் கலாச்சார இடங்களை பொறுத்தவரை இந்தியா ஒரு 12 மாத கால சுற்றுலா இடமாகும். ஆனால் நாடு மிகப் பெரியதாகவும், பிரமாண்டமாகவும் இருப்பதால், முழு நாட்டையும் வலம்வர ஒரு வாழ்க்கை போதுமானதாக இருக்காது என்று வெபினாரில் தெரிவித்துள்ளார்.