
ஒரு புதிய நிறுவனம் மக்கள் வீட்டில் ஐஸ்கிரீம் தயாரிக்க வேண்டும் என்று விரும்புகிறது - ஒரு பொத்தானை அழுத்தினால் காபி வருவது போலவே! ஐஸ்கிரீம் இயந்திரம் வெறும் 60 வினாடிகளில் மென்மையான உறைந்த காக்டெய்ல்களை உருவாக்குகிறது . ஆனால் இதன் விலை $ 1,000 ஆகும். மேலும் இதனால் கோல்ட் காஃபிகள், புரோட்டீன் ஸேக்கள் மற்றும் பலவற்றை உருவாக்க முடியும். பயனர்கள் மறுசுழற்சி செய்யக்கூடிய அலுமினிய கேனை இயந்திரத்தில் செருகுவர். இது 60 முதல் 90 வினாடிகளில் ஐஸ்கிரீமை உருவாக்கி தருகிறது. இது 2022 ஆம் ஆண்டில் $ 500 முதல் $ 1,000 வரை விலையுடன் பொதுமக்களுக்கு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் கேன்களுக்கு 2.50 டாலர் முதல் $ 3 வரை செலவாகும். நிறுவனத்தின் தலைவர் மாட் ஃபோன்டே தனது மகள்கள் இந்த யோசனையுடன் வந்ததாகவும், அதை அவர் உயிர்ப்பித்தார் என்றும் கூறினார்.