• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

ஓய்வு பெறுகிறேன் -பி.வி.சிந்து

ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்றவரும், சாம்பியனுமான பி.வி.சிந்து ஒரு நீண்ட இடுகையைப் பகிர்ந்துகொண்டதன் மூலம், ​​சமூக ஊடகங்களில் அதிர்ச்சி அலைகளை பரப்பினார். ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில், எதிர்பாராத வார்த்தைகளுடன் அது தொடங்கியது - "நான் ஓய்வு பெறுகிறேன்."



பி.வி சிந்துவின் 'நான் ஓய்வு பெறுகிறேன்' குறிப்புக்கு விளையாட்டு அமைச்சர் கிரேன் ரிஜிஜு பதிலளித்தார்.


"நீங்கள் உண்மையில் ஒரு குட்டி அதிர்ச்சியைக் கொடுத்தீர்கள்" என்று

கிரேன் ரிஜிஜு டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.மேலும் இந்தியாவுக்கு இன்னும் பல பரிசுகளை கொண்டுவருவதற்கான வலிமையும் சகிப்புத்தன்மையும் அவளுக்கு உள்ளது என்றும் அவர் கூறினார்.


விவரமாக படித்தால் அதில் அவர்,

"இன்று, இந்த அமைதியின்மை உணர்விலிருந்து நான் ஓய்வு பெறத் தேர்வு செய்கிறேன். இந்த எதிர்மறை, நிலையான பயம், நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றிலிருந்து நான் ஓய்வு பெறுகிறேன், "மிக முக்கியமாக, தரமற்ற சுகாதாரத் தரங்களிலிருந்தும், வைரஸைப் பற்றிய நமது குறைபாடான அணுகுமுறையிலிருந்தும் நான் ஓய்வு பெறத் தேர்வு செய்கிறேன். விளையாட்டிலிருந்து அல்ல "என்று தெளிவுபடுத்தினார்.


பதிவின் தொடக்கத்தில் நான் உங்களுக்கு ஒரு சிறிய அட்டாக் கொடுத்திருக்கலாம்; உங்கள் கவனத்தை ஈர்க்கவே இவ்வாறு செய்தேன் என்று சிந்து தெரிவித்துள்ளார்.



Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios