சர்வதேச விண்வெளி நிலையம், மனிதர்கள் விண்வெளிக்கு செல்ல ஆரம்பித்து 20 ஆண்டுகள் ஆனதை கொண்டாடிகொண்டு இருக்கின்றது. விண்வெளி வீரர்கள் விண்வெளியில் வாழ்வது எப்படி என விவரிக்கும் சில புத்தகங்களை பார்ப்போம். அவர்கள் அங்கு எப்படி உறங்குவார்கள்? என்ன உண்பார்கள் என பல செய்திகளை இந்த புத்தகங்களில் பகிர்ந்து உள்ளார்கள்.
சமந்தா கிறிஸ்டோபோரெட்டி எழுதிய ஒரு பயிற்சி விண்வெளி வீரரின் டைரி: இத்தாலியன் விண்வெளி வீரர் சமந்தா கிறிஸ்டோபோரெட்டி ஐ.எஸ்.எஸ்ஸில் அவர் செலவழித்த 200 நாட்களை இதில் பகிர்ந்துள்ளார், இது ஒரு பயிற்சி விண்வெளி வீரரின் பயணத்தில் உள்ள சவால்களை எடுத்துரைக்கிறது. கிறிஸ்டோபோரெட்டி, விண்வெளிக்கு சென்ற முதல் இத்தாலிய பெண்மணியும் ஆவார்.

டிம் எழுதிய சுயசரிதை: பிரிட்டிஷ் விண்வெளி வீரர் டிம் பீக் சோதனை விமானியாக மாறுவதற்கு முன்பு, இராணுவத்தில் செலவழித்த 18 ஆண்டுகால வாழ்க்கை யையு ம் இந்த புத்தகம் பட்டியலிடுகிறது. கிறிஸ் ஹாட்ஃபீல்ட் எழுதிய "92 நிமிடங்களில் உலகம் முழுவதும்": சர்வதேச விண்வெளி நிலையத்தின் தளபதியாக பணியாற்றிய கனேடிய விண்வெளி வீரர் கிறிஸ் ஹாட்ஃபீல்ட், விண்வெளி நிலையம் பூமியைச் சுற்றிய காலத்தை விளக்கி உள்ளார். அமெரிக்க விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி, விண்வெளியில் மிக நீண்ட காலம் தங்கியிருந்த காலத்தில், அவரின் அனுபவங்கள் குறித்து மிக ஆழமான புத்தகத்தை எழுதியுள்ளார். மிக நீண்ட விண்வெளிப் பயணத்திற்கான சாதனையைப் படைத்தவர் கெல்லி என்பது குறிப்பிடத்தக்கது.