
நாசி படையின் தலைவராக இருந்த அடால்ப் ஹிட்லர் இரண்டாம் உலக போரின் போது தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. ஹிட்லர் என்று சொன்னதும் நமக்கு ஞாபகம் வருவது அவரது கோவம் தான். தற்போது அவர் பயன்படுத்திய டாய்லெட் சீட் ஒன்று ஏலம் விடப்போவதாகவும், அந்த டாய்லெட் சீட் குறைந்த பட்சம் 10 லட்சத்திற்கு மேல் ஏலத்திற்கு போகும் என்று எதிர்பார்க்க படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹிட்லரிடம் இருந்து திருடப்பட்ட டாய்லெட் சீட்!!

ஜெர்மனியில் இருந்த அவரது வீட்டிலிருந்து அமெரிக்க வீரர் ஒருவரால் திருடப்பட்ட டாய்லெட் சீட் இதுவே ஆகும். டாய்லெட் சீட்டோடு மட்டுமல்லாமல், ஹிட்லர் முதலாம் உலக போரில் பயன்படுத்திய உடைகள் மற்றும் வரைந்த ஓவியங்களையும் அந்த அமெரிக்க வீரர் திருடியுள்ளார். இந்த டாய்லெட் சீட் தான் தற்போது ஏலத்திற்கு வர உள்ளதாக அந்த நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.