மக்கள் ஆக்கப்பூர்வமாக மாறி தங்கள் நண்பர்களையும் அன்பானவர்களையும் ஆச்சரியப்படுத்த புதுமையான வழிகளைக் கண்டுபிடிக்கின்றனர். தனிப்பட்ட பரிசுகளுக்கு பதிலாக, இன்று மக்கள் ஆன்லைன் பரிசுகளை விரும்புகிறார்கள், இது கோவிட்-க்கு பிந்தைய காலத்தில் ஒரு புதிய ட்ரெண்ட்டாக மாறியுள்ளது. OTT தளங்களான நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் போன்ற ஆன்லைன் தளங்களுக்கான வருடாந்திர சந்தாக்களை பரிசளிக்கும் திட்டங்கள் முதல் மின் புத்தகங்கள், தனிப்பட்ட வானொலி பேச்சு நிகழ்ச்சிகள் ஆகியவை உருவாகி உள்ளன.

எங்களால் நேராக எதையும் வழங்க முடியாது என்பதால், ‘வீடியோ அழைப்பில் கிட்டார் கலைஞர்’ என்ற யோசனையுடன் வந்தோம். ஒரு நபர் அவர் நண்பருக்கு இசையால் அன்பை வெளிப்படுத்த விரும்பினால், அவர ஒரு ஆர்டரை வைக்கலாம். ஆர்டர் வழங்கப்பட்ட பிறகு, கிட்டார் கலைஞர் அனுப்புநரைத் தொடர்புகொண்டு, இசைக்க வேண்டிய பாடல்களின் பட்டியலை பெறுவார். பின்பு பெறுநரை தொடர்பு கொண்டு பாடல்களை இசைப்பார் என்று, ஃபெர்ன்ஸ் என் பெட்டல்ஸ்(இந்தியா, யுஏஇ மற்றும் சிங்கப்பூர்) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பவன் காடியா விளக்குகிறார்.