உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் தனது நாட்டின் பாதுகாப்பிற்காக புதிய டிரோன்களை உருவாக்கி வருகின்றன. குறிப்பாக அமெரிக்க உள்ளிட்ட நாடுகள், தனது எதிரி நாடுகளை ஆளில்லா டிரோன்கள் மூலம் தாக்கி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் 70,000 அடி உயரத்தில் பறக்க கூடிய ஆளில்லா டிரோன் உருவாக்கப்பட்டு வருகிறது.
டிரோன் :-
உளவு பார்ப்பது, ஆயுதங்களை சப்பலி செய்வது, வெடிகுண்டுகளாக மாறி தாக்குதல் நடத்துவது, சிறிய ரக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்துவது போன்ற பலவற்றிற்கு இந்த டிரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்திய டிரோனின் சிறப்பம்சங்கள்:-
1. எதிரி நாடுகளின் பகுதிகளை உளவு பார்த்து அதன் காட்சிகளை நேரடியாக கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும் தன்மை கொண்டது.
2. 90 நாட்களுக்கு இடைவிடாது பறக்கும் தன்மை கொண்டது.
3. இதில் சூரிய எரிசக்தி பயன்படுத்த உள்ளது. எதிரிகளின் ரேடாரில் சிக்காமல் 70ஆயிரம் ஆதி உயரத்தில் பறக்கும் சிறப்பு கொண்டது.
4. பேரிடர் காலத்திலும் உதவும் தன்மை இதில் உள்ளது.
இது போன்ற இன்னும் பல சிறப்பம்சங்கள் கொண்ட இந்த அதிநவீன டிரோனை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.