திருச்சி சரக காவல்துறை மற்றும் மாவட்ட காவல் துறை இணைந்து தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி

திருச்சி சரக காவல் துறை மற்றும் மாவட்ட காவல் துறை இணைந்து தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி லால்குடி காவல் உட் கோட்டத்திற்குட்பட்ட நெ 1 டோல்கேட் பகுதியில் துணை காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைப்பெற்றது. குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் அஜீம் வரவேற்றார். சிறுகனூர் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார் , துணை காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) சுரேஷ்குமார் , சமயபுரம் போக்குவரத்து காவல் நிலைய காவல் ஆய்வாளர் சுப்பையா, லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பழனியம்மாள், கொள்ளிடம் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் மற்றும் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து,சாலை போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பது குறித்த துண்டு பிரசுரங்களை திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் ஆனி விஜயா இ.கா.ப. அவர்கள் விநியோகம் செய்து , பேரணியை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். ஊர்க்காவல் படை வட்டார தளபதி சுராஜ்தீன் வாழ்த்துரை வழங்கினார். விழிப்புணர்வு பேரணியில் ஊர்க்காவல் படையினர், போக்குவரத்து காவலர்கள், காவலர்கள் என சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். சாலைவிதிகளை மதிப்போம், விபத்துக்களை தவிர்ப்போம். தலைக்கவசம் உயிர்க்காவசம். போக்குவரத்து விதிகளை கடைபிடிப்போம் போன்ற ஸ்லோகங்கள் பேரணியில் கூறப்பட்டது .இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் ,சாலை போக்குவரத்து விதிமுறை குறித்த துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. மேலும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தை திருமணம் தடுத்தல், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது குறித்த துண்டு பிரசுரம் மற்றும் ஸ்டிக்கர்கள் வாகனங்களில் ஒட்டப்பட்டது. குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு நன்றி கூறினார்.

Earnbounty_1068_260_0208.jpg
  • Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram
cadests.jpg
water.jpg
bag.jpg
Screenshot%20(17)_edited.jpg
XCM_Manual_1209672_1068x260_.jpg

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios