கிரீன்லாந்தின் கீழ் ஒரு மாபெரும் ஏரியின் தொல்பொருள்படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த ஏரி மில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என ஆராச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது ‘புதைபடிவ ஏரி’ என்று அழைக்கப்படும் ஒரு நிகழ்வின் விளைவாக கருதப்படுகிறது. இந்த பகுதியில் இதற்கு முன்னர் இந்த ஏரி யாராலும் கவனிக்கப்படவில்லை. இந்த படிவங்கள் கிரீன்லாந்தின் பனிக்கட்டிக்கு கீழே ஆழமாக புதைக்கப்பட்டிருந்தன. கிரீன்லாந்தின் பனிக்கட்டி அண்டார்டிகாவுக்குப் பிறகு உலகின் இரண்டாவது மிகப்பெரிய பனிக்கட்டியாகும்.

நாசாவின் ஆபரேஷன் ஐஸ் பிரிட்ஜ், பனிக்கு அடியில் உள்ள நிலப்பரப்பைக் கண்டறிய பல சென்சார்கள் பொருத்தப்பட்ட ஒரு விமானத்தைப் பயன்படுத்துகிறது.
இந்த ஆராய்ச்சியில் இருந்து பெறக்கூடிய பதிவுகள் விலைமதிப்பற்றவை என்பதையும் அவை மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதையும் அவர்கள் அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். "இது துருவப் பகுதியின் கடந்த காலத்தைப் பற்றி சொல்வது மட்டுமல்லாமல் உலகின் எதிர்காலத்தைகணிக்க உதவும் என்கின்றனர்",ஆராய்ச்சியாளர்கள்.