1960 களில் இருந்து, சிலிக்கான் பல்வேறு தொழில்நுட்பங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. தொலைபேசிகள், கணினிகள் மற்றும் டிஜிட்டல் கடிகாரங்கள் போன்ற பொதுவான தொழில்நுட்பங்களில் பயன்படுத்த சிலிக்கான் ஏற்றதாக அமைகின்றது. கிராஃபீன்(graphene) உலோகத்தின் பயன்பாடுகளை உற்று நோக்கும் போது சிலிக்கானை விட கிராஃபீன் சிறந்தது என்கின்றனர்.

கிராஃபீன் என்பது பூமியில் உள்ள மிக வலிமையான பொருட்களில் ஒன்றாகும்.
இன்று பல கணினிகள் மற்றும் மின்னணு சாதனங்களின் கணினி சிப்களில் சிலிக்கான் பயன்படுத்தப்படுகிறது. சிலிக்கான் ஒரு குறைக்கடத்தி(semi conductor) ஆகும், அதாவது இது சில நேரங்களில் மின்சாரத்தை கடத்தும் பிற நிலைமைகளில் ஒரு மின்கடத்தாக செயல்படும். இயற்கையாகவே, கிராஃபீன் ஒரு குறைக்கடத்தி அல்ல. இருப்பினும், டென்மார்க்கில் உள்ள ஆர்ஹஸ் பல்கலைக்கழகம் கிராஃபீனின் தாள்களை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து ஒரு சிறிய இடைவெளியை விட்டு ஆராய்ச்சி செய்தனர். இந்த சிறிய இடைவெளி அடுக்குகளுக்கு இடையில் ஆற்றலை மாற்றுவதை ஊக்குவிக்கிறது.இதன் மூலம் வேகமான மற்றும் சிறிய எலக்ட்ரானிக் சிப் உருவாகி உள்ளது. இதனால் அதிக டிரான்சிஸ்டர்களை ஒரு சிப்பில் அடக்கலாம் மற்றும் அதிக சக்திவாய்ந்த செயலிகளை கணினிகளில் பயன்படுத்தலாம்.
ஆடை நிறுவனமான வோல்பேக் கிராஃபீனிலிருந்து தயாரிக்கப்பட்ட அணியக்கூடிய ஆடைகளை உருவாக்கியுள்ளது.
தாமஸ் எடிசன் தனது லைட்பல்புக்கு ஒரு கார்பனை தான் பயன்படுத்தினார். கிராஃபீனும் ஒரு வகையான கார்பன் ஆகும். எனவே லைட்பல்புகளும் கிராஃபீனாக மாறும்.
மேலும் முற்றிலும் மடிக்கக்கூடிய தொடுதிரைகளையும்(touchscreen) கிராஃபீனிலிருந்து தயாரிக்கலாம்.