நவம்பர் 2020 இல், இந்தியாவில் மூன்று லட்சம் கோடிக்கும் அதிகமான டிஜிட்டல் பரிவர்த்தனைகள்(transaction) மேற்கொள்ளப்பட்டன.இதில் ஃபோன்பே மற்றும் கூகிள் பே 81% பங்கைக் கொண்டிருந்தன. கூகிள் பேவைப் பற்றி பேசுகையில், நிறுவனம் ஒரு புதிய 2020 ரிவைண்ட் அம்சத்தை அறிவித்துள்ளது, இது பயனர்கள் முழு வருடத்திலும் எவ்வளவு செலவு செய்தார்கள் என்பதைப் வரைபடத்துடன் விளக்குகிறது. அதிக பரிவர்த்தனைகளைக் செய்த மாதத்தை முன்னிலைப்படுத்துகிறது.

Google Pay பயன்பாட்டைத் திறந்து, மேலே உள்ள ரிவைன்ட் என்ற லோகோவைத் தட்டவும். உங்கள் வருட செலவுகளை நீங்கள் காணலாம். உங்களுக்கு அருகில் உள்ள மளிகை கடைக்கு நீங்கள் எவ்வளவு பங்களிப்பு செய்தீர்கள் என்பதை google Pay காட்டுகிறது. இது உணவு தட்டுகளின் எண்ணிக்கையில் பணத்தைக் காட்டுகிறது.