நிலம், அது மலிவு விலை வீடுகள், ஒரு சமூக பண்ணை, ஒரு பொது பூங்கா அல்லது இயற்கை வாழ்விடமாக இருக்கலாம், ஆனால் அதற்கு பதிலாக பல இடங்களில் ஒரு பெரிய பலகை விளையாட்டாக மாற்றப்பட்டுள்ளது. இது ஒரு வகையான பொழுதுபோக்கு அம்சமாக இல்லாமல் ஒரு கௌரவ அடையாளமாக செயல்படுகிறது. உலகில் கிட்டத்தட்ட 40,000 கோல்ஃப் மைதானங்கள் உள்ளன. அதே வேளையில், ஒரு வீரருக்கு 26 மடங்கு இடம் தேவைப்படுகிறது. கோல்ப் விளையாடுவது இயற்கையோடு ஒன்றி இருக்கின்றது என்ற தவறான கருத்து உள்ளது. கோல்ஃப் மைதானங்கள் இயற்கையானவை அல்ல - அவை இயற்கை போன்று காட்சியளிக்கும் கேளிக்கை பூங்காக்கள்.

கோல்ஃப் மைதானங்களின் தோற்றத்தை பராமரிக்க ஒவ்வொரு ஆண்டும் 9 பில்லியன் லிட்டர் தண்ணீர் அமெரிக்காவில் வீணடிக்கப்படுகிறது. தாய்லாந்தில் ஒரு கோல்ஃப் மைதானம் 60,000 கிராமவாசிகளைப் போலவே தண்ணீரைப் பயன்படுத்துகிறது. பணக்கார சுற்றுலாப் பயணிகள் அவர்கள் வீட்டில் விளையாடும் அதே விளையாட்டை விளையாட இவ்வளவு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. 98 சதவிகித பூச்சிக்கொல்லிகளும், 95 சதவிகித களைக்கொல்லிகளும் ஒரு விளையாட்டு மைதானத்தின் அழகியல் முறையை பராமரிக்க பயன்படுத்தப்படுகிறது என்பது பொறுப்பற்ற செயல்.