
விஞ்ஞானிகள் கண்ணில் சேதமடைந்த நரம்பு குணப்படுத்த மரபணு சிகிச்சையைப் பயன்படுத்த உள்ளனர். ஆக்சான்கள் பொதுவாக சேதம் அடைந்தால் மீண்டும் உருவாகுவதில்லை, அதாவது சேதம் பெரும்பாலும் மீளமுடியாதது. இப்பொழுது மரபணு சிகிச்சையை பயன்படுத்தி இதனை சரி செய்யலாம் என கண்டுபிடித்து உள்ளனர்.
நேச்சர் கம்யூனிகேஷன்ஸில் இன்று வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், புரோட்ருடின் எனப்படும் ஒரு புரதம் கண் நரம்புகளை குணப்படுத்துமா என்று விஞ்ஞானிகள் சோதித்தனர்.
இந்த நுட்பம் கௌகோமா எனும் கண் நோயிலிருந்து பாதுகாக்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் காண்பித்தனர். கௌகோமாவில் மூளையுடன் கண்ணை இணைக்கும் பார்வை நரம்பு படிப்படியாக சேதம் அடையும். இது பார்வை இழப்புக்கு வழிவகுக்கும். இங்கிலாந்தில், 40 வயதிற்கு மேற்பட்ட 50 பேரில் ஒருவர், 75 வயதுக்கு மேற்பட்ட பத்து பேரில் ஒருவர் கௌகோமாவால் பாதிக்கப்படுகின்றனர்.