புவி வெப்பமடைதல் காரணமாக கால்நடைகளின் வெப்ப அழுத்தம் அதிகரிக்கின்றது.எனவே கால்நடைகள், கிரீன்ஹவுஸ் வாயுக்களை 14.5 % வெளியேறுகின்றன.இது ஒரு சுழற்சியாக மாறுகிறது.
விலங்குகளின் தயாரிப்புகளை உபயோகிப்பதைக் குறைக்க இது ஒரு நல்ல தருணம் என்று சைவ ஆர்வலர்கள் பரிந்துரைக்கின்றனர்.எனினும் விஞ்ஞானிகளிடம் மற்றொரு தீர்வு உள்ளது - சூப்பர் கன்றுகளான வெப்ப-எதிர்ப்பு இனத்தை உருவாக்க மரபணு மாற்றம் மற்றும் குளோனிங்கைப் பயன்படுத்துவது.

"வெப்பநிலை அதிகரிப்பு, கருவுறுதல் தொடர்பான பிரச்சினைகளை அதிகரிக்கும் ”,என்று நியூசிலாந்தின் விஞ்ஞானி கோய்ட்ஸ் லைபிள், PhD, கூறினார். கருமை நிறங்கள் அதிக ஒளியையும் வெப்பத்தையும் உறிஞ்சுவதால், லைபிள் மற்றும் பிற விஞ்ஞானிகள் குழு ஹால்ஸ்டீன்-ஃப்ரீசியன் கால்நடைகளின் பூச்சுகளை வெண்மையாக்க மரபணு மாற்றம் செய்தனர்.
கால்நடையின் கருவில் நிறமி மரபணுவை மாற்ற விஞ்ஞானிகள் CRISPR என்ற மரபணு திருத்தும் கருவியைப் பயன்படுத்தினர்.
பின்னர், அவர்கள் கருக்களை குளோன் செய்து 22 ஆரோக்கியமான மாடுகளில் பொருத்தினர்.
இரண்டு மாடுகள் மட்டுமே தங்கள் சூப்பர் கன்றுகளை பெற்றெடுத்தனர்
துரதிர்ஷ்டவசமாக, ஒரு மாடு உடனடியாக இறந்தது. மற்றொன்று நான்கு வாரங்கள் மட்டுமே வாழ்ந்தது. மரபணு திருத்துதலைக் காட்டிலும் குளோனிங்கின் சிக்கல்களே இழப்புகளுக்கு காரணம் என்று லைபிள் கூறியது.
விஞ்ஞானிகள் தவறுகளைத் திருத்துவதற்கான சாத்தியக்கூறுகளை முயற்சிக்கின்றனர்.