முக்கோர்மிகோசிஸ் அல்லது கருப்பு பூஞ்சை எனப்படும் நோயால் டெல்லி, மும்பை மற்றும் அகமதாபாத்தில் வாழும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் . ஊடக அறிக்கையின்படி, அகமதாபாத்தில் கண்டறியப்பட்ட மொத்த 44 முக்கோமிகோசிஸ் நோய்களில், குறைந்தது ஒன்பது நோயாளிகள் இறந்துள்ளனர். இதன் விளைவாக சிலருக்கு குருட்டுத்தன்மை ஏற்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில், சர் கங்கா ராம் மருத்துவமனையின் (எஸ்.ஜி.ஆர்.எச்) ஈ.என்.டி அறுவை சிகிச்சை நிபுணர்கள் ,13 கோவிட் -19னால் தூண்டப்பட்ட பூஞ்சை தொற்றை கண்டறிந்தனர் . இதை ஒரு 'ஆபத்தான துன்பம்' என்று அழைத்த அவர்கள், 'அரிதாக இருந்தாலும் இந்த தொற்று புதியதல்ல என்றனர். புதியது என்னவென்றால், COVID-19னால் தூண்டப்பட்ட மியூகோமிகோசிஸ்.

இது பார்வை இழப்பு மற்றும் மூக்கு அல்லது தாடை எலும்பை அகற்றுவதற்கும் வழிவகுக்கும் என்கின்றனர், மருத்துவர்கள்.