57 வயதான டூ, 27 ஆண்டுகளாக டாக்ஸியை ஓட்டுகிறார், எட்டு ஆண்டுகளாக [கரோக்கி பாடியதற்கு வெகுமதியாக] பயனர்களுக்கு பணம் தருகிறார். ஆறு ஆண்டுகளாக பாடும் வீடியோக்களை படமாக்குகிறார்.இது குறித்து டூ கூறுவதாவது, நான் 10,000 வீடியோக்களை படமாக்கியுள்ளேன்", என்றார். டூவின் டாக்ஸியில் ஏறுவது ஒரு ஒப்பந்தம் போன்றாகும். உங்கள் ஓட்டுனருக்காக நீங்கள் பாடவேண்டும். நீங்கள் பாடவில்லை என்றால் உங்களுக்கு தள்ளுபடி கிடைக்காது, மேலும் எந்த பரிசுகளையும் வெல்ல முடியாது.

பலர் பாடுவதற்கு மிகவும் வெட்கப்படுகிறார்கள். “இது அவர்களின் தைரியத்தை வரவழைப்பதற்காகும். அவர்களுக்கு ஒரு சூப்பர் ஸ்டார் ஆக பயிற்சி அளிப்பதற்காகும் ”, என்று அவர் தனித்துவமான நம்பிக்கையுடன் கூறுகிறார். டூ ஒரு பாடகரின் முயற்சியை விரும்பினால், அவர் அவர்களுக்கான பயணத்தின் விலையை இலவசமாக்குவார். சில சமயங்களில் ரொக்கப் பரிசையும் வழங்குவார். டூவின் காருக்குள் இருக்கும் கேமராக்கள் ஒவ்வொரு பாடல்களையும் YouTube இல் பதிவேற்றும்.