கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பாப்பினிசேரி நகரில் வண்ணமயமான திருமண லெஹங்காக்கள், புடவைகள், கவுன் மற்றும் பளபளப்பான சல்வார்கள் வைக்கப்பட்டுள்ளன. இது ஒரு "சிண்ட்ரெல்லாஸுக்கான குகை" என்று கடையை நிறுவிய சபிதா கூறுகிறார்.

இவர் ஒரு பெண்ணுடைய பாரம்பரிய இந்திய திருமணத்திற்கு தேவையான அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் - இலவசமாக வழங்குகிறார். வடிவமைப்பாளர்களும் செல்வந்தர்களும் ரெயின்போ: தி வுமன்ஸ் அவுட்ஃபிட் என்று அழைக்கப்படும் கடைக்கு துணிகளை நன்கொடையாக வழங்குகிறார்கள். இது திருமணத்திற்கு துணிகளை வாங்க முடியாத வறிய மக்களுக்கு தரப்படுகின்றது. 41 வயதான ஆடை வடிவமைப்பாளர் சபிதாவிற்கு கொரோனா வைரஸ் ஊரடங்கின் போது இந்த யோசனை உதித்தது. "நான் பல ஆண்டுகளாக ஏழை மணப்பெண்களுக்காக திருமண ஆடைகளக நன்கொடையாக வழங்கி வருகிறேன். ஆனால் இதுபோன்று கொடுக்கும் போது, இந்த பெண்கள் தாங்கள் அணிய விரும்பும் ஆடையைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு கிடைக்காது என்பதை நான் உணர்ந்தேன். அவர்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான நாளுக்கான துணியைக் கூட தேர்வு செய்ய முடியாதது கொடுமை. எனவே இந்த கடையில் அவர்கள் அவர்களுக்கு பிடித்ததை எடுத்து கொள்ளலாம்.