
கனேடிய கட்டிடக் கலைஞர் நடாலி டியோன் தென்கிழக்கு கியூபெக்கில் ஒரு காட்டில் வீடு கட்டி முடித்துள்ளார். மான்ட்ரியலுக்கு தென்கிழக்கே 60 மைல் தொலைவில் உள்ள டவுன்ஷிப்பில் அமைந்திருக்கும் ஃபாரஸ்ட் ஹவுஸ் இயற்கையோடு நெருக்கமாக வாழ விரும்பும் ஒரு தம்பதியருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் வீட்டிற்குத் தேர்ந்தெடுத்த தளத்தில் பெரிய பாறைகள் இருந்தன. எனவே கற்பாறையை ஒட்டி தரை மட்டம் மூன்று மீட்டர் உயர்த்தப்பட்டது.

பிரதான கட்டமைப்பிற்கு கான்கிரீட் மற்றும் எஃகு பயன்படுத்தப்பட்டாலும், உயர்த்தப்பட்ட கூறுகள் கியூபெக் மரத்திலிருந்து செய்யப்பட்டது. தம்பதியினர் தங்கள் புதிய வீட்டை விரும்புகிறார்கள்,அவர்களின் அதிர்ஷ்டசாலி விருந்தினர்கள் வீட்டைக் கண்டு வியக்கின்றனர், என்று டியோன் கூறினார்.