கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக பிரேசிலில் உள்ள மூன்று தொழிற்சாலைகளை மூடப்படும் என்று கார்மேக்கர் ஃபோர்டு நிறுவனம் கூறியுள்ளது. அங்கு அது ஒரு நூற்றாண்டு காலமாக செயல்பட்டு வருகிறது. இதனால் 5,000 வேலைகள் நிறுத்தப்பட்டன. நிறுவனம் பல யுக்திகளை கையாண்ட போதிலும் இழப்புகள் தொடர்ந்தன. இதில் கனரக ட்ரக் வணிகத்திலிருந்து வெளியேறுதல், செலவுகளைக் குறைத்தல் மற்றும் புதிய தயாரிப்புகளைத் தொடங்குவது ஆகியவை அடங்கும். எனினும் ஃபோர்டு அர்ஜென்டினா, உருகுவே மற்றும் பிற சந்தைகளில் இருந்து பெறப்பட்ட கார்களுடன் தொடர்ந்து சேவை செய்யும் என்று கூறப்படுகிறது.
