
பட்டன் போன் முதல் ஸ்மார்ட் போன் வரை தகுந்த விலையில் தரமாக தருவதில் புகழ் பெற்ற நிறுவனமாக விளங்குவது சாம்சங் . இந்த சாம்சங் நிறுவனம் ஐந்து புதிய ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேலக்சி f 12, கேலக்சி f 62, கேலக்சிA 52, கேலக்சி A 72, கேலக்சி M 02 போன்ற ஐந்து மாடல் ஸ்மார்ட் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக அந்நிறுவனத்தின் வெவ்வேறு நாடுகளின் அதிகார பூர்வமான தளங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேலக்சி f 12 மற்றும் கேலக்சி f 62 ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் பிளிப் கார்டு உடன் சேர்ந்து சாம்சங் நிறுவனம் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கேலக்சிA 52 5ஜி மாடல் ஆஸ்திரியாவிலும் , கேலக்சி A 72 மாடல் கரிபியன் தீவிலும் விரைவில் அறிமுகமாக உள்ளது. இந்த போன்கள் பட்ஜெட்டில் உள்ளதாக சாம்சங் நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டு இருப்பதால் இந்த போன்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.