• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

முதியோர் இல்லங்களில் நடந்த புதுமை

மைட்ஸ்டோனில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசிப்பவர்கள், பிக் டிரா ஃபெஸ்டிவல் 2020 பங்கேற்றனர். அவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தின் கதைகளை வரையும் படி கேட்டு கொள்ளப்பட்டனர். மேலும் இன்றைய குழந்தைகளுக்கு நம்பிக்கைதரும் வகையில் ஒரு கதையை எழுதினர். மாணவர்கள் அவர்களின் கதைகளைப் படித்து மகிழ்ந்தனர்.மேலும் அவர்களின் கலைப்படைப்பு மூலம் அவர்களைப் பற்றி பல செய்திகளை அறிந்து கொண்டனர். கடல் ஆமைகள், புலிகள் மற்றும் டால்ஃபின்கள் முதலியவற்றை எவ்வாறு வரையலாம் என்பதை அவர்கள் குழந்தைகளோடு பகிர்ந்தனர்.

முதியோர் இல்லத்தின் மேலாளர் ஜாக்குவி பாம்பியஸ் கூறினார்: “இந்த ஆண்டு தி பிக் டிராவில் பங்கேற்றது எங்களுக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது, மேலும் எங்கள் படைப்பாற்றலை சோதனைக்கு உட்படுத்த இது ஒரு அருமையான வாய்ப்பு என்றார். இதனை தொடர்ந்து நாடு முழுவதும், 70 க்கும் மேற்பட்ட ஆதரவு இல்லங்கள் ‘மாற்றத்தின் காலம்' என்ற கருப்பொருளைச் சுற்றி கலைப் படைப்புகளை உருவாக்க தங்கள் சமூகங்களுடன் இணைந்து செயல்படுகின்றன.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios