கே2 141 பி எக்ஸோப்ளானெட்டில், கடல் எரிமலைக்குழம்புகளால் ஆனது. மற்றும் வானத்திலிருந்து கல் மழை பெய்கிறது. பெருங்கடல்கள் மற்றும் பனிப்பாறைகளைக் கொண்ட பூமியைப் போலன்றி, பூமியின் நீர் சுழற்சிக்கு முற்றிலும் நேர்மாறான ஒரு பாறை சுழற்சியைக் கொண்டிருப்பதால் இந்த கிரகத்தில் கல் மழை பெய்கிறது என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
பூமியின் அளவை விட கே2 141 பி கிரகம் 1.5 மடங்கு அதிகமாக இருக்கும். மேலும் சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. எனவே 3,000 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்கிறது.

அச்சுறுத்தும் வகையில் இந்த கிரகம் தோற்றமளித்தாலும், விஞ்ஞானிகள் பூமியைப் போன்ற கிரகங்களின் வரலாற்றைப் படித்த பிறகு நேர்மறையான சிந்தனையைக் கொண்டுள்ளனர். "பூமி உட்பட அனைத்து பாறை கிரகங்களும் ஆரம்ப காலத்தில் உருகிய கிரகமாவே இருந்தன, ஆனால் விரைவாக குளிர்ந்து திடப்படுத்தப்பட்டன", என்கிறார் பூமி மற்றும் கிரக அறிவியல் துறையின் பேராசிரியர் கோவன்.