
வியாழன் கிரகத்தின் சந்திரன் யூரோபா இருளில் ஒளிர்வதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
யூரோபா கடலால் நிறைந்த சந்திரன் ஆகும். கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் (ஜேபிஎல்) ஒரு சோதனை நடத்தினர். அதில் அவர்கள் யூரோபா மற்றும் வியாழனின் தொடர்புகளை ஆராய்ந்து , இந்த புதிய அற்புதமான கண்டுபிடிப்பை உருவாக்கி உள்ளனர்.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, வெவ்வேறு உப்பு கலவைகள்(மெக்னீசியம் சல்பேட், சோடியம் கோல்ரைட்) கதிர்வீச்சினால் தாக்கப்படும் பொழுது ஒளியை வெளியிடுவதாக தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பேசிய முதன்மை ஆராய்ச்சியாளர் முர்த்தி குடிபதி,இந்த ஆராய்ச்சிகள் யூரோபாவில் வாழ்க்கைக்கு ஏற்ற நிலைமைகள் உள்ளதா என்பது குறித்து துப்பு கொடுக்கக்கூடும் என கூறினார்.
மேலும் யூரோபா கதிர்வீச்சின் கீழ் இல்லாவிட்டால், அது நம் நிலவைப் போலவும், நிழல் தரும் இருண்ட ஒன்றாகவே இருந்திருக்கும் என்று குடிபதி கூறினார்.