ஸ்காட்லாந்தை சேர்ந்த ஜோ ஹாக், லண்டன் கேலரியில் 200 க்கும் மேற்பட்ட கையால் வரையப்பட்ட முட்டைகள் வைக்கப்பட்டுள்ளன என்ற வினோதமான கண்டுபிடிப்பைப் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அத்துடன் அவர் புகைப்படங்களையும் இணைத்து இருந்தார்.

ஜோ பகிர்ந்த புகைப்படத்தில், அலமாரிகளில் டஜன் கணக்கான முட்டைகள் வரிசையாக அலங்கரிக்கப்பட்டு இருப்பதை க் காணலாம். அவை தனித்தனி நிலைகளில் சமப்படுத்தப்பட்டு அவற்றுடன் தொடர்புடைய கோமாளி பெயர்களுடன் பெயரிடப்பட்டுள்ளன.
கிழக்கு லண்டனின் டால்ஸ்டனில் உள்ள ஒரு தேவாலயத்தில் தற்போது இது சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
இது டிவிட்டரில் பெரிதும் பகிர்ந்து வரும் நிலையில்,பலர் இந்த படைப்புகளைக் கண்டு அஞ்சுவதாக கூறுகின்றனர். இங்கிலாந்தில் 12 சதவீத மக்களில் ஒருவர் கூல்ரோபோபியாவால்
(கோமாளிகளின் பயம்) பாதிக்கப்படுகிறார்கள்.