
இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களின் (ஐ.ஐ.டி) மாணவர்கள் மற்றும் முன்னால் மாணவர்கள் இணைந்து JEE மற்றும் NEET எழுதும் மாணவ மாணவிகளுக்கு போக்குவரத்து வசதிக்காக ‘எட்ரைடு’ என்ற வலைதளத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த வலைதளம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது - ஒன்று மாணவர்களுக்காக்கவும் ஆகவும் மற்றொன்று முன்னாள் மாணவர்கள் / தன்னார்வலர்களுக்காக்கவும் வடிவமைக்கப் பட்டுள்ளது.
https://www.eduride.in/என்ற வலைதளத்தில் மாணவ மாணவிகள் தங்களது பெயர்,முகவரி, தேர்வு மையம் மற்றும் ஹால் டிக்கெட் விவரங்களை பதிவு செய்து போக்குவரத்து சேவையை தொடர்பு கொள்ளலாம்.
மற்றொன்று முன்னாள் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களும் உதவி செய்யலாம் என இந்த வலைதளத்தில் குறிப்பிடப்ட்டுள்ளது.
அவர்களுக்காக வாகனங்களை ஏற்பாடு செய்தல், போக்குவரத்துக்கு நிதி உதவி அளித்தல் போன்ற வசதிகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன.
இந்த வலைதளத்தில் தகவல்களையும் பரிமாறிக் கொள்வதன் மூலம் மாணவ மாணவிகளுக்கு நீட் தேர்வு எழுதுவதற்கு போக்குவரத்து வசதி எளிமையாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
நீட் தேர்வு வருகின்ற செப்டம்பர் 13ஆம் தேதி நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது..