அண்மையில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற விக்டர் குளோவர், விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் முதல் வீடியோவைப் பகிர்ந்தார். அது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது. க்ரூ -1 என்ற விண்கலத்தில் நாசா விண்வெளி வீரர் சென்றார். அவருடன் மொத்தம் நான்கு விண்வெளி வீரர்கள் நவம்பர் 15 அன்று விண்வெளிக்கு சென்றனர்.

" ஜன்னல் வழியாக பூமியைப் பார்ப்பது, எனது உணர்ச்சியை அதிகரித்தது. மேலும் அது மூச்சடைக்கும் கண்ணோட்டமாக அமைந்தது! ” என்று வீடியோவைப் பகிரும்போது குளோவர் எழுதினார்.
குளோவர் தனது தளபதி மைக்கேல் ஹாப்கின்ஸ் மற்றும் சக விண்வெளி வீரர்களான ஷானன் வாக்கர் மற்றும் சோச்சி நோகுச்சி ஆகியோருடன் நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து புறப்பட்டார். இந்த பணியின் மூலம், குளோவர் விண்வெளி நிலையத்தில் நீண்ட காலம் வாழ்ந்த முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க விண்வெளி வீரர் என்ற வரலாற்றை உருவாக்கி உள்ளார்.