ஒரு குழந்தையின் தோலில் ஸ்டீராய்டு கிரீம் பூசப்பட்ட பிறகு அதன் முகம் பலூன் போல ஆனது மற்றும் முடி வளர ஆரம்பித்தது. குழந்தை வறண்ட சருமத்தால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர் குழந்தைக்கு கிரீம் தேய்த்துவந்துள்ளனர். திடீரென்று அவரது நெற்றியில் முடி வளரத் தொடங்கியது.

கிரீம் எடுத்து இரண்டு மாதங்கள் கழித்து குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனவே மருத்துவர்களால் சரியான காரணத்தை முதலில் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் அவர்கள் குழந்தையின் உணவு உட்கொள்ளலைக் குறைக்க பெற்றோரிடம் கேட்டு கொண்டார்கள். ஆனால் ஒரு மாதத்திற்குப் பிறகு பிரச்சனை இன்னும் மோசமானது. குழந்தை சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. கிரீமில் க்ளோபெட்டசோல் புரோபியோனேட் எனப்படும் கார்டிகோஸ்டீராய்டு இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். அவை குறுகிய கால பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். பெற்றோர்கள் அன்றாட அடிப்படையில் கிரீமை பயன்படுத்தியதால் இத்தகைய நிலைமை ஏற்பட்டுள்ளது.கிரீம் பயன்படுத்துவதை நிறுத்தியப்போது, குழந்தையின் நிலைமை மேம்பட்டது.