• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

டிரைவிங் ஸ்கூல் போனால், டெஸ்ட் இல்லாமல் கிடைக்கப்போகும் லைசென்ஸ் - வரப்போகும் புதிய விதிமுறைகள் !!


வளர்ந்து வரும் காலத்தில் வாகனம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஒரு நாள் வாகனம் இல்லை என்றாலும் கூட ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு செல்வது நமக்கு பெரும் சவாலாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.


வாகனம் ஓட்டுவதற்கு அடிப்படை தேவையாக கருதப்படுவது வாகனம் ஓட்டும் நபருக்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் மேலும் கண்டிப்பாக லைசென்ஸ் அவரிடம் இருக்க வேண்டும்.லைசென்ஸ் என்பது RTO அலுவலகத்தில் இரு சக்கர வாகனம் என்றால் எட்டு போட்டு காண்பித்து வாங்குவது வழக்கம். தற்போது டிரைவிங் ஸ்கூலில் கற்றாலே எந்தவித டெஸ்ட் இல்லாமல், எளிதாக லைசென்ஸ் வாங்கிக்கொள்ளலாம் என்ற புதிய விதிமுறை குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.



மக்களுக்கு அளிக்கின்ற ஓட்டுநர் பயிற்சியை தரமானதாக அளிப்பதற்காக ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு இருக்க வேண்டிய வசதிகள் மற்றும் சில விதமான தேவைகள் மேலும் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. இதன் மூலம் சிறப்பு பயிற்சி பெற்ற டிரைவர்கள் கிடைப்பார்கள் மேலும் விபத்தை தடுக்க உதவும் என கூறப்பட்டுள்ளது.





Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios