• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

வரைய கற்றுகொடுக்கும் ரோபோ


குழந்தைகளுக்கு வரைய கற்று கொடுக்க வடிவமைக்கப்பட்ட ரோபோவின் பெயர் ட்ரா பொ ஆகும்.



பெற்றோர்கள் பலகையையோ அல்லது வேறு சில வரைதல் மேற்பரப்பையோ சுவரில் தொங்கவிட வேண்டும். பட்டாம்பூச்சி வடிவ ரோபோவின் உடலில் ஒரு பேனாவையோ பென்சிலையோ பொருத்த வேண்டும்.இரண்டு லூப்-எண்டட் கயிறுகளில் ட்ராபொவை இணைக்க வேண்டும்.

ட்ராபொ பின்னர் வரைதல் மேற்பரப்பில் செங்குத்தாகவும் கிடைமட்டமாகவும் தன்னை நகர்த்தி கோடுகளை வரைகிறது. இதே பாணியில் முழு படத்தையும் விரைவாக வரைகிறது.



ஒவ்வொரு வரியையும் முடித்தபின் சாதனம் இடைநிறுத்த(pause)ப்படுகிறது. குழந்தை / மாணவர் அதை தங்கள் சொந்த ஸ்கெட்ச்பேடில் வரைய நேரம் வழங்குகிறது. பெற்றோர்கள் அவர்கள் குழந்தையின் வயது மற்றும் வரைதல் திறன்களின் அடிப்படையில் இடைநிறுத்தங்களின் நேரத்தை தேர்வு செய்கிறார்கள்.


முன்பு யாஹூ, ஆரக்கிள் மற்றும் மைக்ரோசாஃப்ட் போன்ற இடங்களில் பணியாற்றிய கலிபோர்னியாவைச் சேர்ந்த பொறியாளர்கள் குழுவால் ட்ராபொ உருவாக்கப்பட்டது. இதன் விலை $ 200 ஆகும்.


Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios