• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

கிணற்றில் விழுந்த நாய்குட்டிகளை மீட்க தாய் நடத்திய பாசபோராட்டம் - உயிரோடு மீட்கப்பட்டதா குட்டிகள்???

காஞ்சிபுரம் தும்பவனம் பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. இதை குடிநீர் தேவைக்காக அந்த கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது கிணற்றில் தண்ணீர் இல்லாத சூழலால் பொதுமக்கள் அந்த கிணறை பயன்படுத்துவதில்லை. பயன்பாடின்றி கிடந்த கிணற்றுக்குள் 3 நாய் குட்டிகள் தவறி விழுந்தன.



தன்னுடைய குட்டிகள் கிணற்றுக்குள் விழுந்ததை பார்த்த தாய் நாய் கண்ணீருடன் கிணற்றை குரைத்து கொண்டே சுற்றி வந்தது. இதை பார்த்த கிராம மக்கள் நாயிடம் போனதும் நாய், கிணற்றுக்குள் குட்டி விழுந்து விட்டதை காட்டியது. பயன்பாடில்லாத கிணறு என்பதால் பொது மக்கள் அதில் இறங்காமல் தீயணைப்பு துறையினருக்கு போன் செய்தனர்.


உடனடியாக வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி, 3 நாய் குட்டிகளையும் உயிரோடு பத்திரமாக மீட்டு தாய் நாயிடம் சேர்த்தனர். தன்னுடைய மூன்று குட்டிகளையும் உயிரோடு பார்த்த தாய் நாய் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தது.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios