இன்றைய சூழலில் நாய், பூனை போன்ற வீட்டு விலங்குகளை வளர்ப்பது சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக டாக் லவர்ஸ் அதிகமாகி கொண்டே இருக்கிறார்கள். சினிமா பிரபலங்களில் பலரும் கோல்டன் டாக், போமெரியன் போன்ற விலை உயர்ந்த நாய்களை வாங்கி அன்போடு வளர்த்து வருகின்றனர். ஆசையாக வளர்த்த நாய்க்கு சொத்து எழுதி வைப்பது என்பது இப்போது வைரல் ஆகி வருகிறது.
அமெரிக்காவின் நாஷ்வில் என்ற பகுதியை சேர்ந்த நபர் அவருடைய வங்கி கணக்கில் இருந்த பணம் முழுவதையும் தன்னை ஆசையாக பார்த்து கொண்ட நாயின் பெயரில் எழுதி வைத்துள்ளார். இந்த பணத்தின் மதிப்பு ஒரு கோடி, இரண்டு கோடி அல்ல., 36 கோடி!! தனக்கு பிறகு என்னுடைய நாயை செல்லமாக பார்த்து கொள்பருக்கு தான் என்னுடைய சொத்து என எழுதிவைத்துவிட்டு இவர் இறந்துள்ளார்.

இந்த பணம் அறக்கட்டளை ஒன்றிற்கு மாற்றப்படும் என்றும், தற்போது நாயை கண்காணித்து வருபவர், நாயை வளர்ப்பதற்காக அந்த பணத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.