• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

விண்ணுக்கு செல்லும் வொய்ட் கோட்!!!

இரண்டு அறுவை சிகிச்சை நிபுணர்கள் விரைவில் ரஷ்யாவுக்குச் செல்வார்கள். அங்கு அவர்கள் ககன்யான் பணிக்கான ரஷ்ய சகாக்களிடமிருந்து விண்வெளி மருத்துவத்தில் அனுபவம் பெறுவார்கள் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவர்கள் விண்வெளி மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.

விண்வெளி பயணத்திற்கு முன்னும் அதற்குப் பின்னரும் விண்வெளி வீரர்களின் ஆரோக்கியத்திற்கு அறுவை சிகிச்சை நிபுணர்கள் பொறுப்பு. அறுவை சிகிச்சை நிபுணர்களும் வருங்கால விண்வெளி வீரர்களுடன் பயிற்சி பெறுவார்கள், என்று அந்த அதிகாரி தெரிவித்தார். இந்திய விமானப்படையின் நான்கு சோதனை விமானிகள், இந்தியாவின் முதல் விண்வெளி பயணத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் மாஸ்கோவிற்கு அருகிலுள்ள யூ ஏ ககரின் ஆராய்ச்சி மற்றும் சோதனை விண்வெளி பயிற்சி மையத்தில் பயிற்சியும் பெற்று வருகின்றனர்.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios