ஆஸ்திரேலியாவில் உள்ள பழக்கப்படுத்தபடாத காட்டு நாய் டிங்கோ என்னும் நாய். இந்தச் சொல் ஈயோரா மக்கள் மொழியில் இருந்து பெறப்பட்டது. இந்நாயின் அறிவியல் பெயர் கேனிஸ் லூபஸ் டிங்கோ என்பதாகும்.

கட்டமைப்பு மற்றும் பழக்கவழக்கங்களில் வீட்டு நாயைப் போலவே, டிங்கோவும் குறுகிய மென்மையான ரோமங்கள், புதர் நிறைந்த வால் மற்றும் நிமிர்ந்த கூர்மையான காதுகள் கொண்டது. பெண் டிங்கோ உயரம் மற்றும் எடை இரண்டிலும் ஆண்களை விட சிறியது.
சிலநேரங்களில் டிங்கோக்கள், கால்நடைகள் குறிப்பாக கன்றுகளை உண்ணும். மேலும் டிங்கோக்கள் செம்மறி மற்றும் கோழிகளையும் இரையாகக் கொண்டுள்ளன.இதன் விளைவாக பெரும்பாலான குடியேறிய பகுதிகளிலிருந்து அவை அகற்றப்படுவதாக தெரிகிறது.