• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

துபாயில் நடந்த வித்தியாசமான இந்திய திருமணம்



துபாயில் வசித்து வரும் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த முகம்மது ஜாசம் மற்றும் அல்மாஸ் அகமது ஆகியோருக்கு திருமணம் நேற்று முன்தினம் நடைபெற்றது. மணமக்கள் அல்மாஸ் இங்கிலாந்து நாட்டில் இறுதியாண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது சகோதரியுடன் உடன் படித்தவர்கள் என்றாலும் அவரை இதற்கு முன் சந்தித்தது இல்லை என ஜாசம் கூறினார். அதனை தொடர்ந்து இருவரும் தங்கள் திருமண வரவேற்பு சமூக இடைவெளியுடன் நடத்த திட்டமிட்டனர்.



இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்காக வாட்ஸ்-அப் மூலம் வீடியோவை அழைப்பாக அனுப்பி இருந்தனர். அதில் அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விதம் குறித்து விளக்கப்பட்டு இருந்தது. திருமண வரவேற்பு நாளன்று சமூக இடைவெளி மற்றும் சுகாதார பாதுகாப்பு காரணங்களுக்காக வித்தியாசமாக வீட்டு வாசலின் முன்னால் அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு முன் இருவரும் நின்றனர். மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு நண்பர்கள் உறவினர்கள் அனைவரும் காரில் வருகை புரிந்தனர்.



இந்த நிகழ்ச்சிக்கு காரில் வந்தவர்கள் வாகனத்தை விட்டு வெளியே வராமல் உள்ளே இருந்தபடி வாசலின் முன் நின்று கொண்டிருந்த மணமக்களை வாழ்த்துக்கள் தெரிவித்து புகைப்படம் எடுத்து சென்றனர். காரிலிருந்து வாழ்த்து தெரிவித்த அவர்களையும் புகைப்படம் எடுத்தனர். ஒவ்வொருவருக்கும் இரண்டு நிமிடம் வாழ்த்து தெரிவிக்க வழங்கப்பட்டிருந்தது.கொரோனா கட்டுப்படுத்தும் விதமாக சுகாதார பாதுகாப்பு விதி முறைகளை கடைபிடித்து சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்த திருமணம் அனைவரையும் கவர்ந்தது.


Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios