
தொழில்நுட்பம் மட்டும் இங்கு வளர்ச்சி அடையவில்லை. கடவுளால் படைக்கப்பட்ட கால நிலையும் வளர்ச்சி அடைந்துள்ளது எனவும் கூறலாம். ஆம், இந்நாள் வரை ஆலங்கட்டி மழை பற்றி தான் நாம் தெரிந்திருப்போம்; படித்திருப்போம் . அனால் வைர மழை எங்காவது நாம் கேள்வி பட்டிருப்போமா... வாய்ப்புகளே இல்லை.
இதைப் பற்றி ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டு வருகிறார் வார்விக் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக இருக்கும் டாம் லாவ்டென் என்பவர்.
இவருக்கு பால்வெளி வானிலை பற்றி ஆர்வத்தில் , மற்ற கிரகங்களில் வானிலை எப்படி இருக்கும் எனக் கண்டறிய முயற்சி மேற்கொண்டிருக்கிறார். அவ்வாறு அவர் வைர மழை எங்கு பெய்யும் என கண்டறிந்துள்ளார். அவரது ஆராய்ச்சியில், நெப்டியூனில் தான் வைர மழை பெய்கிறது என்று தெரிய வந்துள்ளது.
நெப்டியூனில், உறைந்த நிலையில் மீத்தேன் மேகங்கள் உள்ளன. சூரிய மண்டலத்தில் மிகவும் ஆபத்தான வேகத்தில் சூறாவளி வீசும் கிரகமாக உள்ளது. கிரகத்தின் மேற்பரப்பு சமவெளியாக இருப்பதால், சூறாவளியைத் தடுக்கும் அமைப்புகள் எதுவும் இல்லை. அதனால் மணிக்கு 1,500 மைல்கள் வரையிலான வேகத்தில் சூறாவளி வீசுகிறது.
தாங்க முடியாத அளவுக்குச் சப்தம் இருப்பதுடன், அங்குச் சென்றால் வைரம் போன்ற கட்டிகளின் மழையையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். காற்று மண்டலத்தில் உள்ள கார்பன் அழுத்தத்துக்கு உள்ளாகி இப்படிக் கட்டிகளாக வரும். ஆனால் கற்கள் விழுவது பற்றி நாம் கவலைப்பட வேண்டியிருக்காது; உடனடியாக உறைந்து போயிருக்கக் கூடும்.