குளிர்ந்த வாயு விண்வெளியில் கசிவதை வானியலாளர்கள் கண்டுள்ளனர். இது ஒவ்வொரு ஆண்டும் 10,000 சூரியன்களின் மதிப்புள்ள வாயுவை வெளியேற்றி வருகிறது. தற்போது அதன் பாதி அளவு குறைந்து விட்டது. இத்தகைய வாயு நட்சத்திரங்களை உருவாக்குவதற்கு முக்கியமானதாகும். நட்சத்திரங்களை உருவாக்க முடியாத கேலக்ஸிகள் இறக்கின்றன.

"தொலைதூர பிரபஞ்சத்தில் ஒரு பெரிய அளவிலான நட்சத்திரத்தை உருவாக்கும் கேலக்ஸி, குளிர்-வாயு வெளியேற்றத்தின் காரணமாக இறந்து போவதை நாங்கள் பார்ப்பது இதுவே முதல் முறை" என்று ஆய்வின் முதன்மை எழுத்தாளரும் இங்கிலாந்தின் டர்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளருமான அன்னகிராசியா புக்லிசி , ஒரு செய்திக்குறிப்பில் கூறினார்.