
ஒரு ஈரானிய கட்டிடக் கலைஞர் அழிந்து கொண்டிருக்கும் பெங்குவின்களை பாதுகாக்கும் ஒரு வடிவமைப்பைப் பகிர்ந்து கொண்டார். இதன்மூலம் அவர் அண்டார்டிகாவில் பனி உருகுவதை நிறுத்தலாம் என்கின்றார். வடிவமைப்பு இரண்டு பகுதிகளைக் கொண்ட அமைப்பாகும். இதன்படி இக்லூ தரை மற்றும் தண்ணீருக்கு அடியில் அமைக்கப்படும் . மேல் கட்டமைப்புகள் பெங்குவின் இனப்பெருக்கத்திற்காக மனிதனால் உருவாக்கப்பட்ட வாழ்விடங்களையும், முட்டைகளை சூடாக வைத்திருக்க போதுமான இடத்தையும் வழங்குகிறது. கீழ் இக்லூ ஒரு கடல் கடற்பாசியைப் பிரதிபலிக்கும் பள்ளம் போன்ற துளைகளைக் கொண்டுள்ளது மற்றும் நீரில் மூழ்கிய ஊசலாடும் பென்டுலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பென்டுலம் அலைகளால் நகர்த்தப்படுவதால், மின்சாரம் உற்பத்தியாகிறது. இது குளிரூட்டும் ஃபேன்களுடன் இணைக்கப்பட்டு பனியை உருகாமல் தடுக்கின்றது.
‘பெங்குவின் பாதுகாப்பு அமைப்பு’ என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு சஜ்ஜாத் நவிடியின் சிந்தனையாகும். பனிக்கட்டி உருகுவது பெங்குவின் இனத்தை அழிவுக்குள்ளாகிறது. ஏனெனில் பறவைகள் உறைந்த நிலப்பரப்பை வாழவும் இனப்பெருக்கம் செய்யவும் நம்பியுள்ளன.