• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

டிவி பார்த்துகொண்டே இன்ஸ்டாகிராம் பார்ப்பவரா நீங்கள்??

மீடியா மல்டிடாஸ்கிங் நினைவுத்திறனை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் மூளை செயல்பாடு மற்றும் கருவிழி விரிவாக்கம் குறித்து ஆய்வு செய்தனர்.

ஒரு புதிய ஆய்வின்படி, பல வகையான டிஜிட்டல் மீடியாக்களை ஒன்றாகப் பயன்படுத்துவது நினைவக செயலிழப்புக்கு வழிவகுக்கும் என்கின்றனர்.

இந்த ஆய்வு ஸ்டான்போர்ட் மெமரி ஆய்வகத்தில் கெவின் மடோர் என்பவரால் நடத்தப்பட்டது.இந்த ஆய்வை நடத்த மூளை செயல்பாடு மற்றும் கருவிழி விரிவாக்கத்தை அளவிடுவதற்கான நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த குழு 18 முதல் 26 வயதுக்குட்பட்ட 80 நபர்கள் மீது ஆய்வை நடத்தியது. மூளையின் செயல்பாடு மற்றும் கருவிழி விரிவாக்கத்தை அளவிட எலக்ட்ரோஎன்செபலோகிராபி (ஈ.சி.ஜி) மற்றும் பப்புலோமெட்ரி ஆகியவை பயன்படுத்தப்பட்டன.


பங்கேற்பாளர்கள் தொடர்ச்சியான படங்களைக் கொண்ட ஒரு திரையைப் பார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர், பின்னர் அவர்கள் அவற்றை எவ்வளவு விரும்பினார்கள் என்று மதிப்பிட சொல்லப்பட்டது. அதன்பிறகு 10 நிமிடங்களுக்கு ஒரு இடைவெளி எடுக்கும்படி அவர்களிடம் கேட்கப்பட்டது, பின்னர் அவர்களுக்கு அதிகமான படங்கள் காட்டப்பட்டன, அவற்றில் முன்னரேப் பார்த்த படங்களை அடையாளம் காட்டும் படி கூறப்பட்டது.

பங்கேற்பாளர்களுக்கு பின்னர் ஒரு கேள்வித்தாள் வழங்கப்பட்டது, அங்கு அவர்களின் அன்றாட கவனத்தை அளவிடும்படி கேள்விகள் கேட்கப்பட்டது, மேலும் அவர்கள் பலதரப்பட்ட பணிகளில் எவ்வளவு நேரம் ஈடுபடுகிறார்கள் என்று கேட்கப்பட்டுஇருந்தது.

மீடியா மல்டிடாஸ்கிங்கில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள், ஈடுபாடு இல்லாதவர்களைக் காட்டிலும் அதிக கவனத்தை இழக்க நேரிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.




Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios